ஆற்றுப்படை வழிநடத்தும் இப்பயணத்தில், சோழர்கால கோவில்கள், மற்றும் அவர்களுக்கு ஒருகாலத்தில் எதிரிகளாய் திகழ்ந்த கங்கர் கோவில்களையும், குறிப்பாக இராஜாதித்தரை கொன்ற பூதுகன் கட்டிய கோவில்களையும் காண உள்ளோம்.
இராஷ்டிரகூடர்-சோழர்- கங்கர் குறித்த சிறு வரலாற்றுப் பதிவு..
இன்றைய மும்பை தெற்கு மகானத்திலிருந்து அன்று ஆட்சி புரிந்தவர்கள் ராஷ்ட்ரகூடர்கள்
*இராஷ்ட்ரகூடர் இரண்டாம் இருஷ்ணனின் மகளான இளங்கோபிச்சியை மணந்தார் முதலாம் ஆதித்தன்,இவர்களின் மகன் கன்னரதேவன்.ஆதித்தனின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர் பராந்தகசோழன்,இவர் தனது மகள் வீரமாதேவியை இரண்டாம் கிருஷ்ணனின் பேரன் மூன்றாம் இந்திரன் மகன் நான்காம் கோவிந்தனுக்கு மணமுடித்து வைத்தார்.
*இந்த மூன்றாம் இந்திரனின் மூத்தமகன் மூன்றாம் அமோகவர்ஷன் தந்தைக்கு பின் சில காலம் ஆண்டு மறைந்தார்.இவருக்கு பின் பராந்தகரின் மருமகனான நான்காம் கோவிந்தன் குந்தள நாட்டிற்கு அரசனானார்.இவர் ஆண்ட காலத்தில் அங்கே மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்.இந்நிலையில் கீழைசாளுக்கியரான யுத்தமல்லனுக்கும்-இரண்டாம் வீமனுக்கும் நடந்த போரில் யுத்தமல்லனுக்கு ஆதரவாய் இவர் செல்ல,அங்கே தோல்வி கண்டு,அங்கே தனது சிறிய தந்தை மூன்றாம் அமோகவர்ஷனை அரசனாக்கி, மாமனரான பராந்தகரின் நாடான சோழநாட்டில் தஞ்சமடைந்தார்.ஐந்தாண்டுகள் அரசராய் இருந்த அமோகவர்ஷன் இறக்க,அங்கே அந்நாட்டினை மூன்றாம் கிருஷ்ணன் அரசனாக தயாரானார்.தன் மருமகனுக்கு அந்நாட்டை கைப்பற்றி கொடுக்க பராந்தகசோழன் ஒரு பெரும்படையை அனுப்பினார்.அச்சமயம் மூன்றாம் கிருஷ்ணனின் தமக்கையின் கணவனும் மேலைகங்க மன்னனான பூதுகன் பெரும்படையுடன் வந்து மூன்றாம் கிருஷ்ணனுக்கு உதவினார்.இப்படையில் சோழர் தோற்று.இராஷ்ட்ரகூடனான மூன்றாம் கிருஷ்ணன் அரசரானார்.
*இதனால் உறவினரான சோழரும்-இராஷ்ட்ரகூடரும் பகைவராக,கூடுதலாக கங்கர்களும் பகைவராயினர்.
சோழர்களை எதிர்த்து பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக விதமாக இரண்டாம் பூதுகன் கர்நாடக மாநிலத்தில் உள்ள (Hale alur) ஹளே ஆளூர் என்னுமிடத்தில் உள்ள ( Arkeswara temple ) அரகேஸ்வரர் கோயில் என்னும் கோயிலை கட்டினார் . கோயிலின் முன் உள்ள நந்தி மண்டப தூண்களில் தக்கோலப் போரின் காட்சிகளை வடித்துள்ளனர் .
நந்தி மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் தக்கோலப் போரில் நடந்த நிகழ்வுகளான, இராசாதித்தன் யானை மேலே வீழ்த்தப்பட்ட காட்சிகளை வடித்துள்ளனர் . மேலும் கோயிலை சுற்றி சப்தமாதா சிலைகளும் நடுகற்களும் மற்றும் சில சிற்பங்களும் அழகுடன் காட்சி தருகின்றன .
இப்பய்ணத்தில் கலந்துகொள்ள பதிவின் முதல் பின்னூட்டத்தில் உள்ள இணைப்பில் தங்கள் வருகையை உறுதி செய்யவும்

