சில பயணங்கள், புறப்படுவதற்கு முன்பே தொடங்கிவிடுகின்றன.
மொகஞ்சதாரோவின் நடன மங்கையைப் பார்க்கும்போது…
நற்றிணை 134-7 இல்,
“அம் மா மேனி நிரைதொடிக் குறுமகள்” எனும் சொற்றொடரின் வழியாக ஒரு கூட்டு நினைவு நம்மை வாஞ்சையுடன் வருடுகிறது.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளியில் வாழ்ந்த அந்தக் குறுமகளுக்கும், நம் சங்க இலக்கிய குறுமகளுக்கும் இடையே
இருக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சிதான் என்ன?
இந்த கேள்வியோடு தொடங்கும் நமது பயணம்,
காக்கர் ஆற்றின் தடங்கள்,
பிர்ராணாவின் மட்பாண்டங்கள்,
பனவாலியின் நகரக் கட்டமைப்பு,
காளிபங்கனின் உழப்பட்ட நிலம்,
ராக்கிகடியின் திட்டமிடப்பட்ட பெருநகரம்…
என்று சிந்துவெளியின் நிலப்பரப்பை அறிவியலில் தோய்ந்த தேடலுடன் வாசிக்கப் போகிறது.
இந்த தடயங்களை வெறுமனே பார்க்காமல்,
அவற்றுக்கிடையே இருக்கும் மனிதர்கள், இடப்பெயர்கள், பண்பாடு, இலக்கிய நினைவுகள் ஆகியவற்றின் தொடர்புகளை ஆய்ந்துணரும் பார்வையை நமக்கு கற்பித்து நெறிப்படுத்தவிருக்கும் வல்லுநர்கள்:
திரு. R. பாலகிருஷ்ணன் IAS (Retd.)
மதிப்புறு ஆலோசகர், சிந்துவெளி ஆராய்ச்சி மையம்
அவருடன்
முனைவர். சுந்தர் கணேசன்
இயக்குநர், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
இவர்களது சீரிய வழிகாட்டுதல், ஆற்றுப்படையின் Indus Sojourn 2.0 பயணத்தின் Pre-Travel Orientation நிகழ்வாக அமைவதில் நமக்குப் பேருவகை.
இது – அறிதலின் ஆனந்தம்!
இவ்வழிகாட்டுதல் உரை நிகழும் நாள், நேரம் மற்றும் இடம்:
25 செப்டம்பர் 2026, நண்பகல் 11 மணிக்கு
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் சென்னை ரோஜா முத்தையா நூலக வளாகத்திற்கு நேரில் வரலாம்.
முன்பதிவுக்கு:
https://forms.gle/QxnkaDqDEkyiK54F6
சில பயணங்களில் நாம் இடங்களைப் பார்க்கிறோம்.
சில பயணங்களில் நாம் வரலாற்றை உணர்கிறோம்.
Indus Sojourn 2.0, வரலாற்றை உணரும் பயணமாக அமையட்டும்.

Reviews
There are no reviews yet.