Services

ஆற்றுப்படையின் நோக்கம்

ஆற்றுப்படை என்றால் வழிப்படுத்தல் அல்லது வழிகாட்டுதல் என்பது பொருள். பரிசு பெற்ற பாணர் முதலியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தை தம் இனத்தைச் சார்ந்தவர்க்கு கூறித் தம்மைப் போல் அவர்களும் பயன் பெற தாம் பரிசுபெற்ற வள்ளல் அல்லது அரசனிடம் வழிப்படுத்துவது ஆற்றுப்படை ஆகும்! பயணம் தொடர்பான நம் நிறுவனத்திற்கு இப்பெயரே சாலச்சிறந்தது. நமது மண்சார்ந்த வழித்தடங்கள், மரபுச்சின்னங்கள் சுற்றுலாத்தலங்கள், மலையேற்றங்கள் போன்ற பயணம் சார்ந்த நிகழ்வுகளை அனைவருக்கும் பொதுமைபடுத்துவதே நம் குழுவின் முதன்மை நோக்கம்.ஆற்றுப்படையின் நோக்கம் அனைத்து வித பயணங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே.

குடும்ப சுற்றுலாக்கள்

கோடைகால பயணங்கள் மற்றும் விடுமுறைகளில் பொழுதுபோக்க சிறந்த இடங்கள் ஆன்மீக தலங்களுக்கு, வரலாற்று இடங்களுக்கு தகுந்த வழிகாட்டியுடன்,பாதுகாப்பான முறையில் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.

மரபு நடை

நம்முடைய நீண்ட நெடிய வரலாற்றை நமக்கு தெரிவிப்பதில் மரபு சார் இடங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.அவற்றை காண பயணம் ஏற்பாடு செய்து தரப்படும்.

மலையேற்றம்

தகுந்த வழிகாட்டியுடன், பாதுகாப்புடன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலுள்ள மலைகளில் பயணம் செய்வோம்.

கருத்தரங்கம்

பண்பாடு ,வரலாறு மற்றும் இன்னபிற முக்கிய நிகழ்வுகளை நாம் வருடந்தோறும் நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கும் கருத்தரங்குகளை நாம் நடத்துகின்றோம்